இந்திய ரயில்வே 2024 ஆம் ஆண்டிற்கான பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்புகளை அறிவித்துள்ளது. மொத்தம் 11,558 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பணியிடங்கள், தகுதிகள், வயது வரம்பு, சம்பள விவரம், விண்ணப்பிக்கும் முறை மற்றும் முக்கிய தேதிகள் பற்றிய விவரங்கள் பின்வருமாறு:
காலிப்பணியிடங்கள்:
- மொத்தம்: 11,558
- பணியிடங்கள்: டிக்கெட் கிளார்க், ஜூனியர் கிளார்க், டைப் ரைட்டர், டிக்கெட் மேற்பார்வையாளர், ஸ்டேஷன் மாஸ்டர், சீனியர் கிளார்க், சரக்கு ரயில் மேலாளர் மற்றும் பிற Non-Technical Popular Categories (NTPC) பதவிகள்.
கல்வித் தகுதி:
-
12-ம் வகுப்பு (HSC) அடிப்படையில்: 3,445 காலியிடங்கள்
- அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
-
பட்டதாரி (Graduate) அடிப்படையில்: 8,113 காலியிடங்கள்
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
- 12-ம் வகுப்பு அடிப்படையிலான பணியிடங்களுக்கு: 18 முதல் 30 வயது
- பட்டதாரி அடிப்படையிலான பணியிடங்களுக்கு: 18 முதல் 33 வயது
- வயது தளர்வு: SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள், PwBD பிரிவினருக்கு 10 ஆண்டுகள்
சம்பள விவரம்:
- 12-ம் வகுப்பு அடிப்படையிலான பணியிடங்களுக்கு: ரூ.19,900/- முதல் ரூ.63,200/-
- பட்டதாரி அடிப்படையிலான பணியிடங்களுக்கு: ரூ.25,500/- முதல் ரூ.81,100/-
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
- ஆன்லைன் விண்ணப்ப தொடக்க தேதி: 14.09.2024
- ஆன்லைன் விண்ணப்ப கடைசி தேதி: 13.10.2024
- விண்ணப்பிக்க: https://www.rrbapply.gov.in/
விண்ணப்பக் கட்டணம்:
- பொது/OBC பிரிவினருக்கு: ரூ.500/-
- குறிப்பு: முதற்கட்ட கணினி அடிப்படையிலான தேர்வில் (CBT) பங்கேற்றால், ரூ.400/- திரும்ப வழங்கப்படும்.
- SC/ST/பெண்கள்/PwBD/முன்னாள் இராணுவப் பணியாளர்கள்/சிறுபான்மையினர்/பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு: ரூ.250/-
- குறிப்பு: முதற்கட்ட CBT-யில் பங்கேற்றால், முழு தொகையும் திரும்ப வழங்கப்படும்.
தேர்வு முறை:
-
முதற்கட்ட கணினி அடிப்படையிலான தேர்வு (CBT-1):
- பொது அறிவு, கணிதத் திறன், எண்ணறிவு திறன் ஆகியவற்றை மதிப்பாய்வு செய்யும்.
-
இரண்டாம் கட்ட கணினி அடிப்படையிலான தேர்வு (CBT-2):
- பணியிடத்தின் அடிப்படையில் விரிவான மதிப்பாய்வு.
-
டைப்பிங் திறன் தேர்வு/கணினி அடிப்படையிலான திறன் தேர்வு (பணியிடத்தின் அடிப்படையில்):
-
சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை:
முக்கிய தேதிகள்:
- ஆன்லைன் விண்ணப்ப தொடக்கம்: 14.09.2024
- ஆன்லைன் விண்ணப்ப முடிவு: 13.10.2024
- முதற்கட்ட CBT தேர்வு: டிசம்பர் 2024
மேலும் விவரங்களுக்கு:
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://www.rrbapply.gov.in/
மேலும் விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனமாகப் படித்து, அதன்படி விண்ணப்பிக்கவும்.
0 comments: